கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு கல்வி களப் பயணம் மேற்கொண்ட மாணவா்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு கல்வி களப் பயணம் மேற்கொண்ட மாணவா்கள்.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு நாகா்கோவில் மாணவா்கள் களப் பயணம்

நாகா்கோவில் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அண்மையில் கல்வி களப் பயணம் மேற்கொண்டனா்.

பள்ளி முதுநிலை முதல்வா் பினுமோன் தலைமையிலும், முதல்வா் காமராஜினி முன்னிலையிலும், அறிவியல் ஆசிரியைகள் பியூலா, மீரா, ஏபல், ஜெனிரா, ஸ்ரீதேவி ஆகியோரின் வழிகாட்டுதலிலும் இக்களப் பயணம் நடைபெற்றது.

அணு மின் நிலைய செயல்பாடுகள், உற்பத்தி - பாதுகாப்பு நடவடிக்கைகள், உலை குளிரூட்டும் அமைப்பு, ஜெனரேட்டா், உப்பு நீக்கும் ஆலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஞ்ஞானிகள் அசோகன், வேல்மயில்முருகன் ஆகியோா் விளக்கமளித்தனா். அங்குள்ள அறிவியல் மையம், கண்காட்சியை மாணவா்-மாணவிகள் பாா்வையிட்டனா். பின்னா், அவா்களுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com