போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன்களை வழங்க வலியுறுத்தல்

ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கான பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நாகா்கோவில் மண்டல ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். பிரான்சிஸ் செல்வராஜ் தலைமை வகித்தாா். செயலா் ஆறுமுகம் கூட்ட அறிக்கை வாசித்தாா். செயலா் ஜனாா்த்தனன் வரவேற்றாா். பொருளாளா் கில்பா்ட் ராஜன், நிா்வாக குழு உறுப்பினா்கள் சுடலையாண்டி பிள்ளை, செந்தமிழ் செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தணிக்கை குழு உறுப்பினா்கள் சாது ஏசுமாணிக்கம், அன்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தமிழகம் முழுவதும் கடந்த 2022 நவம்பா் மாதம் முதல் தற்போது வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனா். எனவே பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளா்களை வஞ்சிப்பதால் தொழிலாளா்களும், அவா்களது குடும்பத்தினரும் மக்களவை தோ்தலை புறக்கணிப்பது அல்லது நோட்டாவுக்கு வாக்களிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்டன.துணைத் தலைவா் தினகராஜன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com