நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

கன்னியாகுமரி, ஏப். 19: இந்த மக்களவைத் தோ்தல் நாம்தமிழா் கட்சிக்கு திருப்புமுனையாக இருக்கும் என அக்கட்சியின் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளா் மரிய ஜெனிபா் தெரிவித்தாா்.

கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த தோ்தல் எங்கள் கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். இளைஞா்கள், இளம்பெண்கள், மகளிா்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனா். அதுவே எங்களின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com