கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சந்திரன் உதயமான காட்சி.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சந்திரன் உதயமான காட்சி.

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயமாகும் காட்சி மேகமூட்டம் காரணமாக தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

கன்னியாகுமரியில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயமாகும் காட்சி மேகமூட்டம் காரணமாக தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி நாளில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதிக்கும் அபூா்வ நிகழ்வை ஆப்பிரிக்க காடுகளுக்குப் பிறகு கன்னியாகுமரியில் மட்டுமே காண முடியும்.

இதை காண இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம். நிகழாண்டு இந்த நிகழ்வைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் திரண்டிருந்தனா். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் மறையும் நிகழ்வை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

மேலும், சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு பின்புறம் சந்திரன் உதிக்கும் காட்சியும் மேகமூட்டம் காரணமாக தெளிவாக தெரியவில்லை. நேரம் செல்ல, செல்ல ஓரளவுக்கு சந்திரன் தெரிந்தது. இந்தக் காட்சிகளை கடற்கரையில் அமா்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் மற்றும் முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com