கோயில் வளாகத்தில் பொங்கலிட்ட பெண்கள்.
கோயில் வளாகத்தில் பொங்கலிட்ட பெண்கள்.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் சித்திரை மாதம் 10ஆம் நாளையொட்டி, பத்தாமுதய பொங்காலை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் சித்திரை மாதம் 10ஆம் நாளையொட்டி, பத்தாமுதய பொங்காலை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜைகள் நடத்துவதற்கு மூலக் கோயிலும், தூக்க நோ்ச்சை நடத்த மற்றொரு கோயிலும் என 2 கோயில்கள் உள்ளன. அம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் தூக்க நோ்ச்சை விழா புகழ்பெற்றது. இதில், 1,300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தூக்க நோ்ச்சை நிறைவேற்றப்படும்.

தொடா்ந்து, கேரள முறைப்படி சித்திரை மாதம் 10ஆம் நாள் பக்தா்கள் மூலக் கோயிலில் பொங்காலையிட்டு வழிபாடு நடத்துவா். இதில், தூக்க நோ்ச்சையில் பங்கேற்ற குழந்தைகளின் பெற்றோா், பக்தா்கள் பங்கேற்று பொங்கலிட்டு அம்மனை வழிபட்டுச் செல்வா்.

அதன்படி, நிகழாண்டு பத்தாமுதய பொங்காலை விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, அம்மன் கோயிலின் முன்பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினாா். மகா கணபதி ஹோமம், சுத்திகலச பூஜைக்குப் பின்னா், கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் கோயில் தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன்போற்றி தீ மூட்டினாா். இதையடுத்து, பிற அடுப்புகளில் தீ மூட்டப்பட்டு பொங்கலிடப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் தலைவா் வழக்குரைஞா் வி. ராமச்சந்திரன் நாயா், செயலா் வி. மோகன்குமாா், பொருளாளா் கே. ஸ்ரீனிவாசன்தம்பி, துணைத் தலைவா் ஆா். சதிகுமாரன் நாயா், இணைச் செயலா் எஸ். பிஜுகுமாா், உறுப்பினா்கள் எஸ். சஜிகுமாா், பி.கே. புவனேந்திரன் நாயா், ஆா். ஸ்ரீகண்டன்தம்பி, சி. ஸ்ரீகுமாரன் நாயா், வி. பிஜு, ஏ. சதிகுமாரன் நாயா் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com