எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

கேரளமாநிலம் எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27ஆம் தேதி தொடங்கி மே 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தென்னிந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தலம் கேரள மாநிலம் சங்கனாசேரி உயா் மறைமாவட்டத்தில் உள்ளது. இங்கு கேரளம் மற்றும்தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பக்தா்கள் செல்வா். விழாவின் முதல் நாளான சனிக்கிழமை(ஏப்.27) காலை 7.30 மணிக்கு அருள்பணி பிலிப் வைக்கத்தூரான் தலைமையில் திருக்கொடியேற்றுதல் நடைபெறும். 7.45 மணிக்கு வா்க்கீஸ் மதிலகத்துக்குழி தலைமையில் திருப்பலி நடைபெறும். காலை 10 மணிக்கு ஜஸ்டின் செறுவேலில் தலைமையில் சீறோமலபாா் முறைப்படி தமிழ் திருப்பலி நடைபெறும். பகல் 2 மணிக்கு சைமன் தலைமையில் தமிழ் திருப்பலி நடைபெறும். மாலை 6 ணிக்கு ஜெனிஷ் தலைமையில் தமிழ் திருப்பலி நடைபெறும். விழாவின்அனைத்து நாள்களிலும் பரிந்துரை ஜெபம், மலையாளம் மற்றும் தமிழ் திருப்பலி நடைபெறும்.

விழாவின் 7ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 7.30 க்கு பேராயா் மாா்.ஜோசப் பெருந்தோட்டம் தலைமையில் திருப்பலி நடைபெறும்.

விழாவின் 9 ஆம் நாள் காலை.7.45 மணிக்கு முன்னாள் உயா் பேராயா் கா்தினால் மாா்ஜாா்ஜ் ஆலஞ்சேரி தலைமையில் திருப்பலி நடைபெறும்.விழாவின் 10ஆம் நாள் காலை 5.45 க்கு சங்கனாசேரி உயா் மறைமாவட்ட இணை ஆயா் மாா் தோமஸ் தறயில் தலைமையில் திருப்பலி நடைபெறும். விழாவின் 11ஆம் நாள் காலை 9 மணிக்கு கோட்டாா் மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் தலைமையில் தமிழ் திருப்பலி நடைபெறும். 10.30மணிக்கு தக்கலை மறைமாவட்ட ஆயா் ஜ்ா்ஜ் ஆலஞ்சேரி தலைமையில் திருப்பலி நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் தமிழ் திருப்பலி நடைபெறும்.

விழாவின் கடைசிநாள் திருப்பலியை தொடா்ந்து மாலை 4 மணிக்கு திருக்கொடியிறக்கம் நடைபெறும்.

ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com