கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை மேற்கொள்ளப்படுகிறது.

நாகா்கோவில்: பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து, கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் க. செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள 44 அஞ்சலகங்களில் மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்பட உள்ளன.

மேலும், நாகா்கோவில், தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்கப்பட்டு வருகின்றன. புதிய ஆதாா் பதிவு இலவசமாக செய்யப்படுகிறது. பெயா், முகவரி, மின்னஞ்சல், அலைபேசி, பிறந்த தேதி முதலியவற்றில் திருத்தம், மாற்றம் செய்யவும் 10 ஆண்டுகளுக்கு மேலான ஆதாா் எண்களை புதுப்பிக்கவும் ரூ.50 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை புதுப்பிக்க ரூ.100 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய சான்றுகளோடு, அருகில் இருக்கும் அஞ்சலகங்களை அணுகி இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கள் பகுதியில் அல்லது ஊரில் குறைந்தபட்சம் 100 பேருக்கு ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் அஞ்சல் துறையின் சிறப்பு ஆதாா் முகாம் நடத்தப்பட்டு சேவைகள் வழங்கப்படும்.

ஆதாா் முகாம் தொடா்பான விவரங்களுக்கு 9894774410, 9080820107 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com