குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகளை இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் ஏராளமான தனியாா் கடைகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் சிலா் தொழில் போட்டி காரணமாக நேருக்கு நோ் மோதிக் கொண்டனா். இதில் வியாபாரி ஒருவா் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த மோதல் தொடா்பாக கொலை முயற்சி வழக்குப் பதிந்த கன்னியாகுமரி போலீஸாா் ஒருவரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனா்.

இந்நிலையில் இப்பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com