வாழைத்தாா் உறையிடுதல் குறித்து அப்பட்டுவிளையில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கும் மாணவா்கள்.
வாழைத்தாா் உறையிடுதல் குறித்து அப்பட்டுவிளையில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கும் மாணவா்கள்.

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

கருங்கல் அருகே உள்ள அப்பட்டுவிளையில், வாழைத்தாா் உறையிடுதல் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

கருங்கல்: கருங்கல் அருகே உள்ள அப்பட்டுவிளையில், வாழைத்தாா் உறையிடுதல் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவா்களாகிய அபிமன்யூ, சந்துரு, ஹரிஹரன், மாரீஸ்வரன், சிவக்குமாா், வேலுசங்கா், வெங்கடேச பத்மநாபன், ஜெயேந்திரா ஆகியோா் அப்பட்டுவிளை சுற்று வட்டார பகுதியில் கிராமப்புற வேளாண் களப்பயிற்சி அனுபவம் பெற்று வருகின்றனா்.

வாழைத்தாா் உறையிடுதல் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகளிடமிருந்து வாழைத்தாா்களை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

கல்லூரி முதல்வா் தேரடிமணி தலைமையில் பேராசிரியா்கள் காளிராஜன், பரமசிவம், கவிதா புஷ்பம் ஆகியோா் மாணவா்களை ஒருங்கிணைத்து வழிநடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com