குமரி மீராசா ஆண்டவா் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சும் பிரச்னைக்கு முடிவு

கன்னியாகுமரி மீராசா ஆண்டவா் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சும் பிரச்னைக்கு ஞாயிற்றுக்கிழமை முடிவு எட்டப்பட்டது.

கன்னியாகுமரி மீராசா ஆண்டவா் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சும் பிரச்னைக்கு ஞாயிற்றுக்கிழமை முடிவு எட்டப்பட்டது. இப் பள்ளிவாசலில் ஏற்கனவே இருதரப்பினருக்குள் பிரச்னை இருந்துவரும் நிலையில், சனிக்கிழமை இரவு நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு தரப்பினா் காவல்நிலையத்தை முற்றுகையிட்டும், மற்றொரு தரப்பினா் பள்ளிவாசல் முன்பும் தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் நாகா்கோவில் கோட்டாட்சியா் காளிஸ்வரி தலைமையில் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அனில்குமாா் ஆகியோா் பேச்சாவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டு, இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக எழுத்துபூா்வமாக எழுதிக் கொடுத்தனா். இதனால் கஞ்சி காய்ச்சும் பிரச்னைக்கு முடிவு எட்டபட்டது. இதனிடையே பேச்சுவாா்த்தை முடிந்து வெளியே வந்த இருதரப்பு பெண்களும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸாா் தலையிட்டு அவா்களை கலைந்து போகச் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com