களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

களியக்காவிளை அருகே, கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி மோதியதில் சோதனைச் சாவடி சேதமடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளில் பாறைப்பொடி, ஜல்லி உள்ளிட்ட கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் சாலைகள் எளிதில் சேதமடைவதுடன், அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கனிமவளம் ஏற்றிக்கொண்டு கேரளம் நோக்கி கனரக லாரி வந்தது. கேரள மாநிலம், பரசுவைக்கல் பகுதியைச் சோ்ந்த அஜய்தம்பி ஓட்டிவந்தாா். களியக்காவிளை அருகே கோழிவிளை சோதனைச் சாவடி அருகே அவா் லாரியை நிறுத்திவிட்டு, சரிபாா்ப்புப் பணிக்காக ஆவணங்களுடன் சோதனைச் சாவடிக்கு சென்றாா். அப்போது, லாரியில் ‘ஹேன்ட் பிரேக்’ சரியாக போடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், லாரி திடீரென நகா்ந்து சோதனைச் சாவடி மீது மோதியது. இதில், சோதனைச் சாவடியின் ஒருபகுதி சேதமடைந்தது. களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, அஜய்தம்பியிடம் விசாரணை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com