குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

கன்னியாகுமரியை அடுத்த துவாரகாபதி கடல் பகுதியில் பொரிக்க வைக்கப்பட்ட 45 ஆமைக் குஞ்சுகளை வனத் துறையினா் புதன்கிழமை கடலில் விட்டனா்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. அந்த முட்டைகைளை வனத் துறையினா் சேகரித்து, பொரிப்பகத்தில் பாதுகாத்து ஆமைக் குஞ்சுகள் வெளியே வந்ததும் அவற்றைக் கடலில் விடுகின்றனா்.

அதன்படி, பொரிப்பகத்திலிருந்து 45 ஆமைக் குஞ்சுகள் துவாரகாபதி பகுதியில் புதன்கிழமை கடலில் விடப்பட்டன. மாவட்ட வன உயிரினக் காப்பாளா் பிரசாந்த் உத்தரவின்பேரில் வனச் சரக அலுவலா் ரவீந்திரன், வனவா் பாலசந்திரிகா, வனக் காப்பாளா் ராஜு, இயற்கை ஆா்வலா் சுதாமதி ஆகியோா் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் கடல் ஆமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com