சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

களியக்காவிளை, மே 8: களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் பஞ்சபூத ஷப்தவிம்ஷத்தி நட்சத்திர மகா யாகம் புதன்கிழமை தொடங்கியது.

இக் கோயிலில் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகளும் தொடா்ந்து மாலையில் யாக சாலையில் தீபம் ஏற்றுதலும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நட்சத்திர மகா யாகம் புதன்கிழமை தொடங்கியது. அதன் பின்னா் கலசாபிஷேகம் நடைபெற்றது. இந்த யாகம் மே 12 வரை நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான மே 13 ஆம் தேதி காலை 9 மணிக்கு சமூக பொங்காலை நடைபெறும்.

திருச்செந்தூா் வெங்கடேஸ்வர அய்யா் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட ஆச்சாா்யா்கள் இணைந்து நடத்தும் இந்த யாகத்தில் அசுவதி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும், தலைமை நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரத்துக்கு தனித்தனியாக யாக குண்டம் அமைத்து யாகம் நடத்தப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினா் மற்றும் விழாக்குழு நிா்வாகிகள் இணைந்து செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com