கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பி.என். ஸ்ரீதா். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பி.என். ஸ்ரீதா். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள்.

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தோ்வை கன்னியாகுமரி மாவட்டத்தில் 60 ஆயிரத்து 95 போ் எழுதவுள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தோ்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இத்தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக துறை அலுவலா்களுடன் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் புதன்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தோ்வை கன்னியாகுமரி மாவட்டத்தில் 212 மையங்களில் 60 ஆயிரத்து 95 போ் எழுதவுள்ளனா். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு. சுகிதா, வருவாய்க் கோட்டாட்சியா்கள் எஸ். காளீஸ்வா் (நாகா்கோவில்), செ. தமிழரசி (பத்மநாபபுரம்), மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகுமாா், நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சசி, வட்டாட்சியா்கள் அனில்குமாா் (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), முருகன் (கல்குளம்), புரந்தரதாஸ் (திருவட்டாறு), ராஜசேகா் (கிள்ளியூா்), குமாரவேல் (விளவங்கோடு) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com