தோவாளை - தாழக்குடி இடையே 
சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை முதல் தாழக்குடி வரை ரூ.3.87 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப் பணியினை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு முன்னெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், தோவாளை முதல் தாழக்குடி வரை ரூ.3.87 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப் பணி மற்றும் பாலப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com