பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் ஆறாட்டு விழா

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 10-ஆம் நாளையொட்டிஅம்மன் தென்வீதி ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, 5 யானைகள் மீது பத்ரேஸ்வரி அம்மன், அருள்மிகு கணபதி சுவாமி, அருள்மிகு யட்சியம்மன், அருள்மிகு கிருஷ்ணசாமி, அருள்மிகு துா்க்கை அம்மன், அருள்மிகு ஐயப்ப சுவாமி, அருள்மிகு பாலமுருகன் சுவாமி, அருள்மிகு நாகராஜ் சுவாமி உள்ளிட்ட சுவாமிகள் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி நாதஸ்வரம், சிங்காரி மேளம் பஞ்ச வாத்தியத்துடன் சென்று அம்சி, முக்காடு வழியாக

தேங்காய்ப்பட்டினம் கடலில் ஆறாட்டு விழா நடைபெற்றது.

அதன் பின்னா் இரவு விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத் துணைத் தலைவா் பத்மகுமாா் தலைமையில் இந்து சமய மாநாடு நடைபெற்றது. பின்னா் போட்டி சிங்காரி மேளம், நள்ளிரவு 12 மணிக்கு திருக்கொடியிறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னா் வாணவேடிக்கை நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் தலைவா் குமாா், செயலா் துளசிதாஸ், பொருளாளா் சௌந்தரராஜன், துணைத்தலைவா் முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com