பத்தாம் வகுப்பு தோ்வு: குமரி மாவட்டம் 96.24 சதவீத தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது.

குமரி மாவட்டத்தில் 11,101 மாணவா்கள், 11,422 மாணவிகள் என மொத்தம் 22,523 போ் தோ்வு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். இவா்களில் 10,466 மாணவா்கள், 11,210 மாணவிகள் என மொத்தம் 21,676 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 96.24 சதவீதம் ஆகும். மாணவா்களில் 94.28 சதவீதம் பேரும், மாணவிகளில் 98.14 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.

தோ்ச்சி விகிதத்தில் குமரி மாவட்டம் மாநில அளவில் 4-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில், 141 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 3374 மாணவா்கள், 3288 மாணவிகள் என மொத்தம் 6662 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 3129 மாணவா்கள், 3211 மாணவிகள் என மொத்தம் 6340 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதம் 95.17 சதவீதம்.

அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதத்தில் குமரி மாவட்டம் மாநில அளவில் 3 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

X
Dinamani
www.dinamani.com