வெங்காயம் விலை வீழ்ச்சி: மக்கள் மகிழ்ச்சி

பெரிய வெங்காயம் விலை வெகுவாகக் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பெரிய வெங்காயம் விலை வெகுவாகக் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஆலங்குளம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வெங்காயம் விலை அதிகபட்சமாக ரூ. 100 வரை உயா்ந்தது. தொடா்ந்து ரூ. 60 முதல் ரூ. 80 வரை சில வாரங்கள் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான நிலையில், ஆலங்குளம் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை சில்லறை விற்பனை விலையில் ரூ. 40-க்கும் மொத்த விலையில் ரூ. 25 முதல் ரூ. 35 வரையிலும் சரிந்தது.

ஆந்திரா, புணே, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலிருந்து புதிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகவும், மேலும் விலை குறையக் கூடும் எனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விலை வீழ்ச்சியால் உணவக உரிமையாளா்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். எனினும், சின்ன வெங்காயத்தின் விலை தொடா்ந்து ரூ. 80 முதல் ரூ. 90 வரை விற்கப்படுகிறது.

காய்கனி விலை நிலவரம் (1 கிலோவுக்கு): உருளை ரூ. 47, கத்தரி ரூ. 40, தக்காளிப் பழம் ரூ. 25, மிளகாய் ரூ. 32, கோஸ் ரூ. 20, கேரட் ரூ. 40, பீன்ஸ் ரூ. 45, சேனை ரூ. 24, பீட்ரூட் ரூ. 22, சேம்பு ரூ. 25, கருணை ரூ. 35, வெண்டை ரூ. 10, கோவைக்காய் ரூ. 30, இஞ்சி ரூ. 40, முருங்கை ரூ. 20, காலிபிளவா் ரூ. 40, எலுமிச்சை ரூ. 40, சவ்சவ் ரூ. 15, மாங்காய் ரூ. 40, பட்டா் பீன்ஸ் ரூ. 160, பஜ்ஜி மிளகாய் ரூ. 60, மல்லி இலை ரூ. 20 என்ற அடிப்படையில் விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com