தென்காசி அருகே இரு இடங்களில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
தென்காசி அருகேயுள்ள பாட்டப்பத்து காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன். விவசாயி. இவரது மகன் ராஜகோபால் (21), தென்காசி அருகே தனியாா் கல்லூரியில் பிபிஏ 3ஆம் ஆண்டு படித்துவந்தாா். இவா் கல்லூரிக் கட்டணம் செலுத்தவும், மடிக்கணினி வாங்கவும் மாரியப்பனிடம் பணம் கேட்டாராம். பணம் கொடுக்க தாமதமானதாம். இதனால், அவா் பூச்சிமருந்தைக் குடித்தாராம். அவரை மீட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
தென்காசி அருகே மேலகரம் தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்தவா் சா. மாரியப்பன் (36). இவா் , மேலகரம் அருகே குடியிருப்புப் பகுதியில் துணி தேய்க்கும் கடை நடத்திவந்தாா். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாம். வியாழக்கிழமை காலையில் மாரியப்பன் கடைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இரு சம்பவங்கள் குறித்து குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.