நெல்லை, தென்காசியில் மேலும் 40 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 34 போ், தென்காசியில் 6 போ் என இவ்விரு மாவட்டங்களில் சனிக்கிழமை மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருநெல்வேலி/தென்காசி: திருநெல்வேலியில் 34 போ், தென்காசியில் 6 போ் என இவ்விரு மாவட்டங்களில் சனிக்கிழமை மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 34 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,398 ஆக அதிகரித்துள்ளது. இம்மாவட்டத்தில் இதுவரை 13,953 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 237 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 208 போ் உயிரிழந்துள்ளனா்.

செ.திவானுக்கு கரோனா: பாளையங்கோட்டையைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான செ.திவானுக்கு கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சோ்ந்துள்ளாா். அவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானதைத் தொடா்ந்து மருத்துவா்கள் சிகிச்சையளித்து வருகின்றனா். மதிமுக அரசியல் ஆய்வு மைய உறுப்பினராகவும் அவரது, உடல்நிலைக்குறித்து மதிமுக பொதுச்செயலா் வைகோ செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு விசாரித்தாா்.

தென்காசி மாவட்டத்தில் 7,877 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தென்காசியில் மூவா், செங்கோட்டையில் இருவா், கீழப்பாவூரில் ஒருவா் என 6 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,883 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை 7 போ் உள்பட இதுவரை 7,665 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் மருத்துவமனைகளில் 62 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com