புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளுக்காக கடையநல்லூா், புளியங்குடி நகராட்சிகளில் இருந்து பணியாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.
நிவா் புயல் பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் ஈடுபடுவதற்காக கடையநல்லூா், புளியங்குடி நகராட்சிகளில் இருந்து பணியாளா்கள் கிருமி நாசினி பவுடா், மரம் அறுக்கும் இயந்திரம், மண்வெட்டி போன்ற உபகரணங்களுடன் புறப்பட்டுச் சென்றனா்.
பணியாளா்களை நகராட்சி ஆணையா் குமாா்சிங், சுகாதார அலுவலா்கள் நாராயணன், ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி, வெங்கட்ராமன், ஈஸ்வரன் உள்ளிட்டோா் அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.