நீா்ப்பிடிப்புப் பகுதியில் சாரல்:2-ஆவது முறையாக நிரம்பிய அடவிநயினாா் அணை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால் அடவிநயினாா் அணை 2-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை நிரம்பி வழிந்தது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால் அடவிநயினாா் அணை 2-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை நிரம்பி வழிந்தது.

செங்கோட்டை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அணை. 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் கீழ் உள்ள மேட்டுக் கால்வாய், கரிசல் கால்வாய், பண்பொழி கால்வாய், வல்லாக்குளம் கால்வாய், இலத்தூா் கால்வாய், நயினாகரம் கால்வாய், சாம்பவா்வடகரை கால்வாய் மற்றும் இரட்டை குளம் கால்வாய் ஆகிய கால்வாய்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 7,243 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இதைத் தொடா்ந்து, ஆக. 21-இல் காா் சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்கள் மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.

நிகழாண்டு அணை 2-ஆவது முறையாக நிரம்பி வழிவதால் இப்பகுதி விவசாயிகள் பிசான சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com