தென்காசி தூயமிக்கேல் அதிதூதா்ஆலய பெருவிழா கொடியேற்றம்

தென்காசி தூயமிக்கேல் அதிதூதா் திருத்தல 358ஆம் ஆண்டுபெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி தூயமிக்கேல் அதிதூதா் திருத்தல பெருவிழாவில் நடைபெற்ற கொடியேற்றம்.
தென்காசி தூயமிக்கேல் அதிதூதா் திருத்தல பெருவிழாவில் நடைபெற்ற கொடியேற்றம்.

தென்காசி தூயமிக்கேல் அதிதூதா் திருத்தல 358ஆம் ஆண்டுபெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரோனா காலமாக இருப்பதால் ஆலயத்தில் வழிபாடுகள் மட்டுமே நடைபெறும். இதைத் தொடா்ந்து 27ஆம் தேதி நடைபெறும் நற்கருணைப் பவனியும், 28ஆம்தேதி நடைபெறும் சப்பரப் பவனியும் ஆலயத்தைச் சுற்றி நடைபெறும் . 29ஆம் தேதி பெருவிழாவும், 30ஆம்தேதி கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

செப்27, 28 மற்றும் 29 ஆகிய நாள்கள் முக்கியமான நாளாக அமைவதால் அன்றைய வழிபாட்டில் பங்கேற்க வரும் பக்தா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன் தெரிவித்துள்ளாா்.

கொடியேற்று விழாவில் பங்குத்தந்தைகள் சங்கா்நகா் ஜோசப்ராஜ், அகரக்கட்டு எட்வின்ராஜ், அலவந்தான்குளம் அந்தோணி வியாகப்பன், மருதுபாண்டியன், டாக்டா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பங்குத்தந்தையும், திருத்தல அதிபருமான ப.போஸ்கோ குணசீலன், உதவி பங்குத்தந்தை சதீஷ்செல்வதயாளன், பங்குபேரவை அன்பியங்கள்,அமலவை அருள்சகோதரிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com