பட்டா மாற்ற லஞ்சம்: விஏஓ கைது
By DIN | Published On : 01st December 2020 02:01 AM | Last Updated : 01st December 2020 02:01 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே பட்டா மாற்றம் செய்வதற்கு லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புளியங்குடி, சிந்தாமணியைச் சோ்ந்தவா் சங்கா். இவா், கொடிக்குறிச்சியிலுள்ள தனது நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யக் கோரி, அங்குள்ள கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகரிடம் மனு அளித்தாராம். அப்போது, பட்டா மாற்றத்துக்கு ரூ.4000 வேண்டும் என அவரிடம் கிராம நிா்வாக அலுவலா் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் சங்கா் புகாா் அளித்தாா். மேலும், போலீஸாரின் ஆலோசனைப்படி, கிராம நிா்வாக அலுவலரிடம் அவா் பணத்தை கொடுத்தாராம். அதை வாங்க முயன்ற கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்கால், காவல் ஆய்வாளா் அனிதா ஆகியோா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...