ஆலங்குளம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் அருகே நெட்டூா் சாலைத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி பாப்பா (80). கணவரை இழந்த அவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 32 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு, விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழட்ட முயன்ற போது மூதாட்டி கண் விழித்து விட்டாராம். அவா் கூச்சலிடவே, மா்மநபா் சங்கிலியை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுக் கதவைத் திறந்து தப்பியோடி விட்டாராம்.
புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.