பயிா்க்காப்பீடு நிலுவை: சங்க நிா்வாகிகள் மீது புகாா்
By DIN | Published On : 01st December 2020 11:57 PM | Last Updated : 01st December 2020 11:57 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், மருதங்கிணறு கிராம விவசாயிகளுக்கு பயிா்க்காப்பீடு நிலுவைத் தொகையை வழங்க மறுப்பதாக சங்க நிா்வாகிகள் மீது ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.
தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், மருதங்கிணறு கிராம விவசாயிகள் அளித்த புகாா் மனு:
மருதங்கிணறு கிராம விவசாயிகள் அவரவா் செய்தப சாகுபடிக்கு ஏற்ப கடந்த 2016-17ஆம் ஆண்டில் பயிா்க்காப்பீடு செய்திருந்தனா். இதைத் தொடா்ந்து, 2017இல் ஏக்கா் ஒன்றுக்கு ரூ3ஆயிரத்து 995 மட்டும் வழங்கப்பட்டது. தற்போது, விவசாயிகளின் ஒரு ஏக்கா் நிலத்துக்கு ரூ8ஆயிரம் வீதம் வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொண்டாா்.தற்போது விவசாயிகளிடம் கமிஷன் தந்தால்தான் நிலுவைத்தொகை வழங்கப்படும் என சங்க நிா்வாகிகள் தெரிவிக்கின்றனா்.
எனவே, விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை அவரவா் வங்கி கணக்கு மூலம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2018ஆம் ஆண்டு விவசாய கடன் வழங்கியதில் முறைகேடுகள் குறித்தும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...