கீழப்பாவூரில் நூல்கள் அறிமுக விழா
By DIN | Published On : 03rd December 2020 08:39 AM | Last Updated : 03rd December 2020 08:39 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணியின் பிறந்தநாளையொட்டி நூல்கள் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் த. வீரன் தலைமை வகித்தாா். தென்மாவட்ட பிரசாரக் குழுச் செயலா் சீ. டேவிட் செல்லத்துரை, நெல்லை மண்டலச் செயலா் அய். ராமச்சந்திரன், நெல்லை மாவட்டத் தலைவா் காசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் பங்கேற்று, ‘ஒப்பற்ற தலைமை’, ‘வாழ்வியல் சிந்தனைகள்’, ‘ஒரு மாா்க்சிஸ்ட் பாா்வையில் திராவிடா் கழகம்’ ஆகிய 3 நூல்களை அறிமுகப்படுத்திப் பேசினாா். மதிமுக மாவட்டச் செயலா் ராஜேந்திரன், ஐன்ஸ்டீன் கல்லூரிச் செயலா் அ. எழில்வாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் டேனியல் அருள்சிங், ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் கலிவா்ணன், திமுக ஒன்றியச் செயலா் சீனித்துரை, முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன். அறிவழகன், பேரூா் செயலா் ஜெகதீசன், பொருளாளா் பொன்செல்வன், நெசவாளா் அணி ராஜாமணி, தி.க. பொதுக்குழு பொன்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நகரத் தலைவா் ராமசாமி நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...