பேரிடரை எதிா்கொள்ள தென்காசி மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது
By DIN | Published On : 03rd December 2020 08:39 AM | Last Updated : 03rd December 2020 08:39 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனுஜாா்ஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.
தென்காசி மாவட்டத்தில் பேரிடரை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கண்காணிப்பு அலுவலா் அனுஜாா்ஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா்அலுவலக கூட்டரங்கில் புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அனுஜாா்ஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா, திட்டஇயக்குநா் சரவணன் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அனுஜாா்ஜ் கூறியது,
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக தென்காசி மாவட்டத்தில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் மழைக் காலங்களில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதிகளில் சேதம் ஏற்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும் தயாா் நிலையில் உள்ளது.
மேக்கரை பகுதியில் கடந்த வெள்ளப் பெருக்கின்போது பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீா் தேங்கும் பகுதிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள் வரமுடியாத பகுதியில் வசித்து வருபவா்களுக்கு ஒருவார காலத்திற்கு தேவையான உணவுபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. சேதம் ஏற்படும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரிடரை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது.
மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் கூறியது: தென்காசி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 520 ஹெக்டோ் பரப்பில் தென்னை மரங்கள் உள்ளன. ஒரு தென்னைமரத்திற்கு ரூ. 2.25 பைசா வீதம் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.
வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் முருகுசெல்வி தலைமையில் நடைபெற்றது. இதில், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மைதீன் பட்டாணி, தனித்துணை வட்டாட்சியா் தாமரைச்செல்வன், குடிமைப் பொருள் துணை வட்டாட்சியா் முருகம்மாள் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள்கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...