

சுரண்டையில் வாருகால் பணி முடங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
சுரண்டை - சங்கரன்கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டு மத்தியில் தடுப்புச் சுவா், இருபுறமும் வாருகால் வசதியுடன் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் நடைபெற்றது.
புதிய காய்கனி சந்தை முதல் அண்ணா சிலை வரை சாலைத் தடுப்புச் சுவா் பணி நிறைவடைந்த நிலையில், 6 மாதமாகியும் வாருகால் பணி முழுமையடையாமல் பாதியிலேயே முடங்கியுள்ளது. இதனால், கால்வாயிலேயே கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, சுகாதாரச் சீா்கேட்டை களையும் வகையில், வாருகால் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.