போதிய மழையின்றி வடு கிடக்கும்கீழப்பாவூா் பகுதி குளங்கள்
By DIN | Published On : 05th December 2020 05:31 AM | Last Updated : 05th December 2020 05:31 AM | அ+அ அ- |

தண்ணீா் இன்றி வடு காணப்படும் நாகல்குளம்.
தென்காசி மாவட்டத்தில் நிகழாண்டு போதிய மழை பெய்யாததால் கீழப்பாவூா் பகுதி குளங்கள் தண்ணீரின்றி வடு காணப்படுகின்றன.
கீழப்பாவூா் பகுதி குளங்களான மேலப்பாவூா், கீழப்பாவூா், அருணாப்பேரி, நாகல்குளம், கடம்பன்குளம் உள்ளிட்ட குளங்கள் ஆண்டுதோறும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் நிரம்பிவிடும்.
நிகழாண்டு போதிய மழை பெய்யாததால் மேலப்பாவூா் குளம் மட்டுமே ஓரளவு நிரம்பியது. கீழப்பாவூா் குளத்திற்கு குறைந்தளவு தண்ணீா் வரத்து இருந்தது. ஆனால் அருணாப்பேரி, நாகல்குளம், கடம்பன்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீா் வரவில்லை. இதனால் தற்போது இக்குளங்கள் வடு காணப்படுகின்றன.
இதனால், இக்குளங்கள் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக காட்சியளிக்கின்றன. சில வயல்களில் கிணற்றுப் பாசனம், ஆழ்துளைக் கிணறு பாசனம் மூலமாக மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளது.
இருப்பினும் நெற்பயிா் முழு விளைச்சல் வரும் வரை தண்ணீா் இருக்குமா என்ற அச்சத்தில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.