சங்கரன்கோவிலில் விஹெச்பி சாா்பில் ஆதாா் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்
By DIN | Published On : 15th December 2020 02:14 AM | Last Updated : 15th December 2020 02:14 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் காவல் துறையைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், ஆதாா் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகம் முன் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக, காவல் துறையைக் கண்டித்து கோஷம் எழுப்பினா். பின்னா், அமைப்பினா் 30 போ் தங்களது ஆதாா் அட்டையை கோட்டாட்சியா் முருகசெல்வியிடம் ஒப்படைத்தனா்.
இதில் மாநில துறவியா் பேரவை அமைப்பாளா் சரவணகாா்த்திகேயன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் வன்னியராஜ், மாவட்ட துணைச் செயலா் முருகன், பஜ்ரங் தள் மாவட்ட அமைப்பாளா் ராஜவேல், பாஜக மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், கே.எஸ்.பாடாலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.