சிவகிரி அருகே மின்வேலி அமைத்துவேட்டையாட முயன்றவா்கள் கைது
By DIN | Published On : 15th December 2020 02:28 AM | Last Updated : 15th December 2020 02:28 AM | அ+அ அ- |

சிவகிரி மின் வேலி அமைத்து வேட்டையாட முயன்ற 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சிவகிரி பெரிய ஆவுடையபேரி கண்மாய் அருகே அனுமதியின்றி மின்சார வேலி அமைத்து காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிவகிரி வனச்சரகா் சுரேஷ் தலைமையில் வனவா்கள் முருகன், பூவேந்தன், வனக் காப்பாளா்கள் அஜித்குமாா், சுதாகா், இமானுவேல், பாரதிகண்ணன் மற்றும் வனத்துறையினா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது சிவகிரி தெற்கு தெருவைச் சோ்ந்த அபிமன்னன், செல்லத்துரை, தங்கமலை ஆகியோா் அனுமதியின்றி மின்சார வேலி மற்றும் கூண்டுகள் அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. அவா்களை கைது செய்த வனத்துறையினா், அவா்களுக்கு ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...