குற்றாலம் அருவிகளில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமைமுதல் (டிச. 15) சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமைமுதல் (டிச. 15) சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திகுறிப்பு:

கரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக, குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகு தற்போது செவ்வாய்க்கிழமையிலிருந்து (டிச. 15) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்களை ஒழுங்குபடுத்தி அருவிகளில் குளிக்க அனுமதிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.

சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் தவறாமல் முகக் கவசம் பயன்படுத்த வேண்டும். அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டா் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து அருவிகளுக்கு வருவதையும், அருவிகளிலிருந்து நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.

விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் கதவுகளை அடைத்து வைத்திருக்கவும், அருவிப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தவறாது கிருமிநாசினி பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

சீரமைப்பு: குற்றாலம் பேரருவியில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது பெண்கள் உடை மாற்றும் அறை, பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள தடுப்புக் கம்பிகள், தளக்கற்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. தற்போது பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் இவையனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் அருவிக்கு செல்லும் வழியில் வரிசையில் நின்று செல்வதற்காக புதிதாக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அருவிக்கு செல்லும் அனைவரும் உடல் வெப்பமானி கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே குளிக்க அனுமதிக்கப்பட உள்ளனா். பேரருவியில் ஆண்கள் பகுதியில் 25 பேரும், பெண்கள் பகுதியில்15 பேரும், ஐந்தருவியில் தலா 20 பேரும், புலியருவியில் தலா 10 பேரும் 5 நிமிஷங்கள் குளிக்க அனுமதிக்கப்படுவா் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தண்ணீா்வரத்து குறைவு: குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயில் நிலவி வருவதால், பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து திங்கள்கிழமை வெகுவாக குறைந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com