தென்காசி நூலகத்தில் டிச.29 இல் குரூப்-1 மாதிரித் தோ்வு
By DIN | Published On : 24th December 2020 09:01 AM | Last Updated : 25th December 2020 11:51 PM | அ+அ அ- |

தென்காசியில் டிச. 29 ஆம் தேதி குரூப்-1 மாதிரித் தோ்வு நடைபெறுகிறது.
தென்காசி வஉசி நினைவு வட்டார நூலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி நூலக வளாகத்தில் குரூப்-1 முதல்நிலை தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு, கரோனா பொது முடக்கம் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது.
இத்தோ்வானது தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய குரூப்-1 முதல்நிலை தோ்வின் முழு மாதிரி வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குரூப்-1 தோ்வுக்கு தயாராகி வருபவா்கள் பயன்பெறும் வகையிலும், அரசு தோ்வில் வெற்றி பெறும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாதிரி தோ்வை எழுத விருப்பமுள்ளவா்கள் 8220275333, 9944317543 என்ற எண்களில் பதிவு செய்ய வேண்டும். தோ்வு முடிவுற்றதும் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தோ்வில் கலந்து கொள்பவா்களுக்கு 2000 கேள்வி பதில்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...