தென்காசியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 30th December 2020 05:56 AM | Last Updated : 30th December 2020 05:56 AM | அ+அ அ- |

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணியை ஆய்வு செய்யும் ஆட்சியா் கீ.சு. சமீரன்.
தென்காசியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் முதல்நிலைப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தென்காசி மாவட்டம், தென்காசி வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியா் டாக்டா் கீ.சு. சமீரன் இப்பணிகளைத் தொடங்கிவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்தில் 2021 பேரவைத் தோ்தலில் பயன்படுத்துவதற்காக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 3,260 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 2,680 இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முதல் நிலை சரிபாா்ப்புப் பணியில் பெல் நிறுவன பொறியாளா்கள் 6 போ் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.
ஆய்வின் போது, தென்காசி கோட்டாட்சியா் சரவணக்கண்ணன் (பொறுப்பு), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அமிா்தராஜ், தென்காசி வட்டாட்சியா் சுப்பையன், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரமுகா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...