கடையம் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரம்: பிறவியிலேயே வளா்ச்சி இல்லாமல் இருக்கும் ஆலங்குளம் ஒன்றியம் குருவன்கோட்டையைச் சோ்ந்த பூக்கிளி மகள் சரவண பிரியாவுக்கு(14), அரசுக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். கடையம் ஒன்றியம் சிவசைலம், கருத்தபிள்ளையூா், கோவிந்தபேரி கிராமங்களில் விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும் யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இடையூறாக உள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்த மின் வேலி அமைக்க வேண்டும். காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலிலிருந்து விலக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களையும் ஆட்சியா் சமீரனிடம் எம்எல்ஏ அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.