அச்சன்புதூரில் நெல் கொள்முதல்நிலையம் அமைக்க பாஜக கோரிக்கை
By DIN | Published On : 05th February 2020 09:29 AM | Last Updated : 05th February 2020 09:29 AM | அ+அ அ- |

அச்சன்புதூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக, தென்காசி மாவட்ட பாஜக விவசாய அணி பொதுச் செயலா் தங்கம், ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளனிடம் அளித்துள்ள மனு:
கடையநல்லூா் வட்டம், அச்சன்புதூா் பேரூராட்சி பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லை, 8 கி.மீ. தொலைவிலுள்ள வடகரை பகுதி நெல்கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ,அச்சன்புதூா் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அச்சன் புதூா் பகுதியில் உள்ள ஊா் பொது கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...