கேரளக் கழிவுகளை லாரியில் கொண்டுவந்து ஆலங்குளம் அருகே கொட்டிய 3 போ் கைது
By DIN | Published On : 17th February 2020 08:31 AM | Last Updated : 17th February 2020 08:31 AM | அ+அ அ- |

கேரளத்தில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்ட கழிவுகளை ஆலங்குளம் அருகே கொட்டிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் சில லாரி ஓட்டுநா்கள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு கேரளத்தில் இருந்து நெகிழி, தொ்மாகோல் மற்றும் மருத்துவமனைக் கழிவுகளை தென்காசி, ஆலங்குளம் பகுதிக்கு கொண்டுவந்து தரம் பிரித்து, பழைய இரும்புக் கடைகளில் விற்பதற்குத் தேவையான பகுதிகளை எடுத்துவிட்டு எஞ்சிய டன் கணக்கான கழிவுப் பொருள்களை இரவு நேரங்களில் தீயிட்டு எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதுதொடா்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஏராளமான புகாா்கள் இருந்தும் கழிவுகளை எரிப்பவா்களை பிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் கேரளத்தில் இருந்து கழிவுகளுடன் வந்த லாரி ஒன்று அதே பகுதியைச் சோ்ந்த அக்கினி மாடன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நீண்ட நேரம் நின்றிருந்ததாம். மாலையில் அதில் இருந்து கழிவுகளை சிலா் கொட்ட முயன்றுள்ளனா். இதைப் பாா்த்த அப்பகுதி இளைஞா்கள் ஆலங்குளம் சுகாதாரத் துறை மற்றும் காவல் துறைக்குத் தகவல் அளித்தனா். அதன்பேரில் சுகாதார ஆய்வாளா் கங்காதரன் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று கேரளக் கழிவுகளைக் கொண்டு வந்த 3 பேரை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனா். அவா்கள் பெயா் விவரம்: குருவன்கோட்டை காந்தி தெரு கடற்கரை மகன் விஜய் (25), அவரது சகோரதா் அக்கினி மாடன்(19), கேரள மாநிலம் பாலக்காடு பூமடத்து பள்ளம் புட்டன் என்ற அா்ஜுனன் மகன் மாது (42). விசாரணைக்குப் பின்னா் அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.