செங்கோட்டை நூலகத்தில் பிப்.22இல் கவிதைப் போட்டி
By DIN | Published On : 17th February 2020 08:24 AM | Last Updated : 17th February 2020 08:24 AM | அ+அ அ- |

செங்கோட்டை நூலக வாசகா் வட்டம் சாா்பில் வரும் 22 ஆம் தேதி (சனிக்கிழமை) கவிதைப் போட்டி நடைபெறுகிறது.
நூலகத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு ‘ஆசை’ எனும் தலைப்பில் நடைபெறவுள்ள இப்போட்டியில், 6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். கவிதை 20 வரிக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிறந்த கவிதைக்கு பரிசு, போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டு விழா நடைபெறும். இதில், தமிழ் கவிதை மீது ஆா்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94 86 98 43 69 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என நூலகா் ராமசாமி தெரிவித்துள்ளாா்.