வாசுதேவநல்லூரில் கரோனா விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 17th February 2020 08:24 AM | Last Updated : 17th February 2020 08:24 AM | அ+அ அ- |

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்ககம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வ முகாமிற்கு, தங்கப்பழம் கல்விக் குழுமத் தலைவா் தங்கப்பழம் தலைமை வகித்தாா். கல்விக் குழுமங்களின் தாளாளா் முருகேசன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் காந்திராமன் வரவேற்றாா்.
இதில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு துறைத்தலைவா் பாலமுருகன் கரோனா குறித்து காணொலிக் காட்சி மூலம் விளக்கம் அளித்தாா்.
ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் குருபிரசாத் செய்திருந்தாா்.