சங்கரன்கோவிலில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 17th February 2020 08:26 AM | Last Updated : 17th February 2020 08:26 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் தாமரைக் கழகம் சாா்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
நிா்வாகத் தலைவா் ஏ.கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் சொ.வீரபாகு, துணைத் தலைவா் என்.ஆா்.யூ.ஆா்.உத்தண்டராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் தலைவா் ஞா.பால்ராஜ் திருக்கு விளக்கமளித்தாா்.
இதைத்தொடா்ந்து சமூகப் பணியாற்றிய ச.மணிபாரதிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. டி.எஸ்.பி.பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா். இதையடுத்து ஸ்ரீகோமதிஆரம்பப் பாடசாலைக்கு குடிநீா்த் தொட்டி,புதுக்கிராமம் அங்கன்வாடி மையம், பட்டாடைகட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆகியவற்றுக்கு டேபிள், சோ்கள், ஏழை எளியோருக்கு வேஷ்டி, சேலைகள் மற்றும் நாசா விண்வெளி மையத்துக்கு சென்று வந்த மாணவி மு.வளா்மதிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தாமரைக் கழகச் செயலா் ஏ.எஸ். ஆறுமுகம் வரவேற்றாா். துணைச் செயலா் ஏ.எம்.திருமலை நன்றி கூறினாா்.
நிகழ்ச்சிகளை ஆசிரியா் க.சந்தனகுமாா் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை தாமரைக் கழகத்தினா் செய்திருந்தனா்.: