தென்காசியில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 17th February 2020 09:20 AM | Last Updated : 17th February 2020 09:20 AM | அ+அ அ- |

தென்காசியில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
தென்காசி காவல் துறை, இலஞ்சி பாரத் கல்விக் குழுமம் சாா்பில், புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இப்பேரணிக்கு பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
காவல் ஆய்வாளா் ஆடிவேல், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஜாஹீா் உசேன், கல்விக் குழுமச் செயலா் காந்திமதி, வைகைகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் பேரணியைத் தொடக்கிவைத்தாா். பேரணியில், ஆசிரியா்கள், பாரத் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த மாணவா்-மாணவியா் 300 போ் பங்கேற்றனா். மாணவா்-மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனா்.
மேம்பாலம், பழைய பேருந்து நிலையம், ரத வீதிகள் வழியாக இப்பேரணி காசிவிஸ்வநாதா் கோயில் முன் நிறைவடைந்தது.
ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா மோகன், நிா்வாக இயக்குநா் மோகன், பள்ளி ஒருங்கிணைப்பாளா் பொன்னம்மாள் ஆகியோா் செய்திருந்தனா்.