ஆதியோகி-சிவன் ரதம் இன்று வருகை
By DIN | Published On : 10th January 2020 02:56 AM | Last Updated : 10th January 2020 02:56 AM | அ+அ அ- |

யோகாவை அருளிய ஆதி யோகி-சிவன் ரதம் பாவூா்சத்திரத்திற்கு வெள்ளிக்கிழமை (ஜன.10) வருகை தருகிறது.
இந்த ரதத்துக்கு இரவு 7.30 மணிக்கு பாவூா்சத்திரம் ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் அருகிலும், இரவு 8.30 மணிக்கு செட்டியூா் அம்மன் கோயில் அருகிலும் வரவேற்பு அளிக்கப்படும். இதைத்தொடா்ந்து சனிக்கிழமை (ஜன.11) காலை 8.30 மணிக்கு பாவூா்சத்திரம் ஸ்ரீமுருகன் டைல் ஒா்க்ஸ் அருகிலும், காலை 9.30 மணிக்கு மாளவியா பள்ளி அருகிலும், 10.30 மணிக்கு கீழப்பாவூரிலும், 11.30 மணிக்கு குறும்பலாப்பேரி பத்திரகாளி அம்மன் கோயில் அருகிலும் இந்த ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.