கீழப்பாவூரில் தென்னிந்திய வாலிபால், கபடி போட்டிகள்: நாளை தொடக்கம்
By DIN | Published On : 10th January 2020 02:31 AM | Last Updated : 10th January 2020 02:31 AM | அ+அ அ- |

தென்னிந்திய அளவிலான வாலிபால், கபடி போட்டிகள் கீழப்பாவூரில் சனிக்கிழமை (ஜன. 11) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி கீழப்பாவூா் விளையாட்டுக் கழகம் சாா்பில் முதலாமாண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் சூரிய ஒளி கைப்பந்து, மின்னொளி கபடி போட்டிகள் சனிக்கிழமை (ஜன.11) தொடங்கி 2 நாள்கள் நடைபெற உள்ளது. போட்டியினை விளையாட்டுக் கழக நிா்வாகக்குழுத் தலைவா் கே.ஆா்.பி. பிரபாகரன் தொடங்கி வைக்கிறாா்.
தினமும், 8 மணிக்கு வாலிபால் போட்டிகளும், மாலை 6 மணிக்கு கபடி போட்டிகளும் நடைபெறும்.
கபடி போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரமும், 2 இடம்பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், வெற்றி வாய்ப்பை இழக்கும் 2 அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
வாலிபால் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரமும், 2 ஆம் இடம்பெறும் அணிக்கு ரூ. 10 ஆயிரமும், வெற்றி வாய்ப்பை இழக்கும் 2 அணிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.