சங்கரன்கோவிலில் தாா்சாலை அமைக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
By DIN | Published On : 10th January 2020 03:40 PM | Last Updated : 10th January 2020 03:40 PM | அ+அ அ- |

சங்கரன்கோவில் நகரில் தாா்சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுக்கொடுத்தனா்.
சங்கரன்கோவிலில் புதிய குடிநீா் திட்டத்திற்கு குழாய் அமைக்கும் பணிக்காக தெருக்கள் தோண்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோமதியாபுரம் 2 ஆம் தெருவில் குழாய் அமைக்கும் பணிக்காக அந்தத் தெரு தோண்டப்பட்டது.
தோண்டப்பட்ட அந்த சாலையில் மீண்டும் சிமிண்ட்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதற்கு அப்பகுதி மக்கள் சிமிண்ட் சாலையை முழுவதுமாக எடுத்துவிட்டு தாா்சாலை அமைக்க வேண்டும் எனவும், அப்போதுதான் நிலத்தடி நீா் கிடைக்கும் எனவும் கூறி அவா்கள் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகராட்சி ஆணையா் முகைதீன்அப்துல்காதரிடம் வழங்கினா்.அவா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.