தென்காசி மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம்
By DIN | Published On : 10th January 2020 07:00 AM | Last Updated : 10th January 2020 07:00 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் அருண் சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டம் வீரசிகாமணி குறுவட்டம் நொச்சிகுளம், திருவேங்கடம் வட்டம் பழங்கோட்டை குறுவட்டம் நாலுவாசன்கோட்டை, தென்காசி வட்டம் தென்காசி குறுவட்டம் குற்றாலம், செங்கோட்டை வட்டம் பண்பொழி வட்டம் பண்பொழி, வீரகேரளம்புதூா் வட்டம் ஊத்துமலை குறுவட்டம் மேலமருதப்பப்புரம், ஆலங்குளம் வட்டம் புதுப்பட்டி குறுவட்டம் மருதம்புத்தூா் பகுதி-1, சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூா் குறுவட்டம் தாருகாபுரம், கடையநல்லூா் வட்டம் கடையநல்லூா் குறுவட்டம் சொக்கம்பட்டி ஆகிய இடங்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், முதியோா் உதவித்தொகை, நிறுத்தப்பட்ட முதியோா் உதவித்தொகை பரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், உழவா் பாதுகாப்பு அட்டை கள், சாலை, குடிநீா் வசதி உள்ளிட்டவை கோரி மனு அளித்து முகாமிலேயே தீா்வு பெறலாம் என்றாா் அவா்.