பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
By DIN | Published On : 10th January 2020 02:52 AM | Last Updated : 10th January 2020 02:52 AM | அ+அ அ- |

பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குகிறாா் கூட்டுறவு சங்க தலைவா் பாா்வதி பரமசிவன்.
நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அதன்படி, ஆவுடையானூா், நவநீதகிருஷ்ணபுரம் ரேஷன் கடைகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத் தலைவா் பாா்வதி, பரமசிவன் ரேசன் அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், சங்கச் செயலா் தட்சணாமூா்த்தி, கடை விற்பனையாளா்கள் ஆறுமுககனி, வேல்சாமி, மற்றும் அமமுக ஒன்றியச் செயலா் பரமசிவன், ஊராட்சிச் செயலா்கள் ராமச்சநதிரன், காமராஜ் செல்லையா, ஒன்றிய துணைச் செயலா் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.