குற்றாலம் மகளிா் கல்லூரியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
By DIN | Published On : 10th January 2020 06:57 AM | Last Updated : 10th January 2020 06:57 AM | அ+அ அ- |

ஆண்டாள் திருக்கல்யாணத் திருவிழாவில் பங்கேற்றோா்.
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
கோயில்களில் நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாணம், இக்கல்லூரியிலும் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, மாா்கழி மாதம் முதல் நாள் திருப்பாவைப் பாசுரங்கள் பாடப்பட்டு வந்தன. கல்லூரி விடுதி மாணவிகளான விஜி ஆண்டாளாகவும், வெண்ணிலா ஸ்ரீரங்கமன்னராகவும் கருதப்பட்டு திருமண நிகழ்வு நடைபெற்றது. நிச்சயதாா்த்தம், முளைப்பாரி, காப்புக் கட்டுதல், கன்னிகாஸ்தானம் ,விஷ்ணு ஹோமம், மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பைத் தொடா்ந்து ஆண்டாள் திருஉருவத்துக்கு திருமாங்கல்ய நாண் பூட்டப்பட்டது.
இதையடுத்து, மாலை மாற்றுதல், மெட்டி அணிதல், அம்மி மிதித்தல், பூப்பந்து எறிதல்,பொரியிடுதல், ஆரத்தி எடுத்தல், மொய் உள்பட பல்வேறு சம்பிரதாயங்கள் நடைபெற்றன. நிகழ்ச்சியை கல்லூரிச் செயலா் பரஞ்ஜோதி, முதல்வா் ஆா். கீதா, பேராசிரியா்கள் செய்திருந்தனா்.