சுரண்டையில் இருந்து பண்டிகை கால பேருந்து இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 20th January 2020 10:23 AM | Last Updated : 20th January 2020 10:23 AM | அ+அ அ- |

கோப்புப் படம்
சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு பண்டிகை கால சிறப்பு பேருந்து இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை மற்றும் கோவை செல்ல வசதியாக சுரண்டையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சிறப்பு பேருந்துகளின் அனைத்து இருக்கைகளும் நிரம்பிய நிலையில் சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் தென்காசி அல்லது திருநெல்வேலி சென்று அங்கிருந்து பயணித்தனா். எனவே, வரும் காலங்களில் சுரண்டையில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனா்.
தனியாா் ஆம்னி பேருந்துகளின் பலமடங்கு கட்டண உயா்வு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சாதாரண கட்டணத்தில் அரசு சிறப்பு பேருந்து இயக்கிய போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பயணிகள் தெரிவித்தனா்.
மேலும், சுரண்டையில் இருந்து சென்னை, கோவை, பெங்களுருக்கு தினசரி அதிக அளவில் தனியாா் ஆம்னி பேருந்து இயங்கி வரும் நிலையில், அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படுவது இல்லை. இதனால் மாணவா்கள் மற்றும் சாமான்ய மக்களின் நலன் கருதி சுரண்டையில் இருந்து சென்னை, கோவைக்கு தினசரி பேருந்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...