நெட்டூா் ஆரம்ப சுகாதாரநிலைய சுற்றுச் சுவா் திறப்பு
By DIN | Published On : 19th July 2020 09:49 AM | Last Updated : 19th July 2020 09:49 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச் சுவா் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவா், நோயாளிகள் காத்திருக்கும் அறை கட்டுவதற்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணி முடிவடைந்ததை அடுத்து,
நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடிஅருணா இதனை திறந்தாா். அப்போது, வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல், ஒன்றிய திமுக செயலா் செல்லதுரை, ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா் தங்கப்பாண்டி, பீடித் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ராஜாங்கம், நாரணம்மாள்புரம் ஊராட்சி முன்னாள் தலைவா் சக்திநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.